விழவு என்ற வார்த்தையிலிருந்து வந்ததே விழா என்பதாகும் விழவு விழித்துக்கொண்டு மகிழ்வதர்குரிய நிகழச்சிகளில் சிறந்து எதுவோ அது விழிவு , விழைந்து செயல்படும் நிகழ்ச்சி விழைவு, இதனை இறைவனைக் கருதி கொண்டாடப்படுவதை விழா என்பர்.
பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்தில் சிவப்பெருமானை “விழாவின்” என்று குறிப்பிடுகின்றார். இங்கு குறையாத அல்லது நிரம்பிய நிலை என்பதாக பொருள் கொள்ள வேண்டும் , செல்வங்களுக்கெல்லாம் அவன் தலைவன்.வாழ்க்கைத் தேவைகளால் நிறைவு பெற்று மகிழ்ந்திருக்கும் மக்கள் குறிப்பிட்ட ஒரு நாளிலோ அல்லது சில நாட்களிலோ ஓரிடத்திலோ அல்லது பல இடங்களிலோ கூடி நடத்தும் விழாக்களுக்கு இறைவன் எழுந்தருள்வதாக ஜதிகம். உலகில் இன்பத்தையும் , ஆன்ம நலத்தையும் ஒருங்கே வழங்கும் வண்ணம் விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன
மக்கள் மகிழ்ந்திருக்கவும் வேறுபாடுகளின்றி விழைந்திருக்கவுமே விழாக்கள் எடுக்கப்படுகின்றன , மரபுவழி விழாக்களை கொண்டாடுவோம். மன மகிழ்ந்த வாழ்வைப் பெறுவோம்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழ்த் தரணியே கொண்டாடும் தைத்திங்கள் நன்னாளில் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகையாய் இருந்த பிரான் நாளும் தனைத்தாங்கும் நந்தியெம்பெருமானுக்கும்.பொலிகின்ற தன் கதிரால் புவனத்தை செழிக்க வைக்கும் சுடரோன் சூரியனுக்கும் காட்சி தர தைத்திங்கள் இரண்டாம் நாள் அம்பாளுடன் திருவுடல் கொண்டு பின் திர்ந்து அம்மையும் அண்ணலும் நாம் அகமகிழ காட்சியருளி பின் விதி உலாக் கண்டு அருள்வார் இறைவன் இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி இன்னருள் புரியும் இன்பத்திருவிழா இதுவாகும்.
“திருவுடல் விழா காண்போம் -மறு ஊடலின்றி வாழ்வும் ”
மகேசனை வழிபடும் மகத்தான நாட்களில் ஒன்று மாசியில் வரும் சிவராத்திரி விழாகும்.சிந்தனையில் அன்பு கலந்து சிவபெருமானை வழிபடும் சிறப்புமிகு இந்நாளில் நான்மறை
நான்கு காலங்கள் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வேத பாராயணங்களும் திருமுறை விண்ணப்பங்களும் செய்யப்பட்டு தரிசனம் செய்யப்பட்டு. சிவாலயங்களில் நிகழ்த்தப்பெறும் சீர்மிகு
விழாக்களில் இது சிறந்தாகும்.
பலி விழா பாடல்செய் பங்குனி உத்திர நாள்
ஒலி விழாக் காளைதே போதியோ பூம்பாவாய் -என்று
ஞானசம்பந்தர் நவின்றருளும் பங்குனி உத்திரம் பெருவிழா பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகையிருந்த பிரான் நாம் கண்டு மகிழும் வண்ணம் .மணவிழா கண்டருளும் மாண்புடைய நாளாகும். பங்குனி உத்திரத்தன்று தெய்வ திருமணத்திற்காக கோயில் முழுவதும் மங்கலமாய் நன்கு அலங்கரிக்கப்பட்டு சுவாமி , அம்பாளும் சிறப்பு திருமஞ்சன நீராட்டு கண்டு பின்பு மாலை திருமண விழா இனிதே நடைபெறும் . இதில் மாலை மாற்று மற்றும் மாங்கல்ய தரணமும் ,ஊஞ்சல் சேவையும் கண்டு உள்ளம் குளிரலாம்.
“பங்குனி விழா காண்போம் – பரமனருள் பெறுவோம் “
அல்லல்கள் தீர்த்து ஆனந்த வாழ்வளிக்கும் ஆனைமுகப் பெருமானுக்கு ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தியன்று கவலைகள் நீங்கிட, காரியங்கள் கை கூடிட கணபதி ஹோமம் நடைபெறுகின்றது. விஷேச அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் செய்யப்பட்டு விநாயகப் பெருமான் அருள் கூட்டிடும் வியன்மிகு வழிபாடு.
“ஆனைமுகன் பணிந்து ஆனந்தமாய் வாழ்வோம்”
புவனத்தை காத்திட, பூவுலகம் செழித்திட புரட்டாசியில் புரந்தரியாம் புண்ணிய திரிபுர சுந்தரியாம் அம்பாளுக்கு நவநாட்கள் நல்விழா கானும் நவராத்திரி திருவிழா. நாயகி நான்முகி நாராயணி என அம்பாள் லக்ஷ்மி சரஸ்வதி துர்கா என்ற வடிவங்கள் தாங்கி ஒன்பது நாட்களும் உற்சவங்கள் கண்டருளும் உன்னத திருவிழா.
“நாயகியை பணிவோம் நலமுடன் வாழ்வோம்”
ஐந்தொழிலையும் புரிந்து ஆண்டருளும் ஐயனுக்கு ஐப்பசியில் அன்னாபிஷேக திருவிழா. ஆடிப்பட்டத்தில் விதைத்து ஐப்பசி நாளில் அறுவடை செய்து அகிலத்துக்கும் அன்னமளிக்கும் ஐயனுக்கு அன்னத்தால் செய்வித்து மகிழ்வது ஐப்பசி அன்னாபிஷேகம். உலக மக்கள் அனைவரும் உணவிற்கு குறைவின்றி வாழ உயிர்கள் நன்றி செலுத்தும் விதமாக இவ்விழா அமைகின்றது. அன்னமும், காய்கறிகளும், பட்சணங்களும் ஐயனுக்கு சாற்றப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றது. பிறகு அதுவே அனைவருக்கும் பிரசாதமாகின்றது.
“அன்னவிழா காண்போம், அனைவருக்கு ஈந்து வாழ்வோம்”
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியான அண்ணாமலையானின் அற்புத பேரொளி வழிபாட்டை நிகழ்த்தும் “துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே” என்று ஞானசம்பந்த பெருமான் நவின்ற நல்விழா கார்த்திகைதீபப் பெருவிழா. கார்த்திகை பௌர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீப பெருவிழா அண்ணாமலையானின் அருள் நினைந்து ஆலயம் முழுதும் அணி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சோதி வடிவின் உருவாக பெருந்தீபம் ஏற்றப்பட்டு பெருந்தரிசனம் செய்யப்படும்.
“தீப விழா காண்போம் திவ்யவாழ்வு பெறுவோம்”
‘ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்’என்று பல்லாண்டு பாடல் பெறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று மக்களை காக்கும் மகேசனுக்கு மஞ்சன நீராட்டு நடைபெறும். (ஆருத்ர அபிஷேகம்) அகிலத்துக்குஉணவளிக்கும் அண்ணலுக்கு ஆதிரைக்களி நிவேதனம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
‘திருவாதிரைக்கு ஒரு வாக்களி’ என்பது பழமொழியாகும்.
“ஆதிரை விழா காண்போம் – மாநிரைவாய் வாழ்வோம்”
ஆண்டு பிறப்பு சுவாமி அம்பாள் , விசேஷ அபிஷேகம் அலங்காரம் ஆராதனை – பஞ்சாங்க படனம். சித்திரை சதயம் அப்பரடிகள் குருபூஜை.
குருபெயர்ச்சி நல்விழா விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகம் சுவாமி அம்பாள் மற்றும்
குரு பகவானுக்கு வைகாசி மூலம் – ஞானசம்பந்தர் குருபூஜை
ஆனி மகம் – மாணிக்கவாசர் சுவாமிக்கு குருபூஜை.
ஆடி சுவாதி -சுந்தரமூர்த்தி சுவாமிகள்-குருபூஜை
விநாயகர் சதுர்த்தி – கணபதி ஹோமம் வினாயகப்பெருமனுக்கு விஷேச அபிஷேக அலங்கார ஆராதனை
புண்ணியம் நலகும் நவராத்திரி விழா 9 நாட்களும் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை
மற்றும் சிறப்பு அலங்காரம்.
ஐப்பசி பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் விசேஷ அலங்காரம் விசேஷ அன்னதானம் அடியார்
பெருமக்களுக்கு.
காத்திகைத் திபப் பெருவிழா சுவாமி , அம்பாளுக்கு விஷேச அபிஷேகம் மாலையில் மகாதீபம் ஏற்றுதல்.
ஆருத்ரா தரிசனம் – சுவாமிக்கு விசேஷ அபிஷகம் மற்றும் ஆதிரைக்கனி நிவேதனம் மற்றும் விநியோம்.
தை மாதம் 2ம் நாள் மாட்டுப்பொங்கலன்று திருவூடல் திருவிழா மற்றும் சுவாமிக்கு திருவிதி உலா
எழுந்தருளல்.
பங்குனி உத்திரம் – சுவாமி திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் சேவை.