சிவாலயம்
“மேன்மைகொள் சைவநீதி மிகுந்து விளங்கும் சான்றோடைய தொண்டை மண்டலத்தில் பட்டு மாநகரம்” என்று மக்களால் போற்றப்படுகின்றதும், தசரத மகா புராணத்தில் தரமாரண்ய ஷேத்திரம் என்று புகழப்படுவதுமாகிய ஆரணி மாநகரத்தின் மேற்பகுதில் கமண்டல நாக நதிக்கரையின் தென்பால் வயல்வெளிக்கிடையே எம்பெருமானாரின் திருக்கோயில் புராதனமாய் அமைந்திருந்து காலப்போக்கில் அத்திருகோயில் சிதைந்து பூமியில் புதையுண்டு போக , தானே வலிய வந்து ஆட்கொண்டருளும் தனிப்பெருங்கருனையில் 1996ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ம் தேதி. இறைவனுடைய இலிங்கத் திருமேனியும் நந்தியெம் பெருமானின் திருமூர்த்தம் கண்டறியப்பட்டு அவ்விடத்தை அகழ்ந்து திருகோயிலின் ஆதார அமைப்பு அறியப்பட்டு ஈசன்பால் அன்புடைய அன்பர்களால் அங்கு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.இவ்வழிப்பாட்டை வலுப்படுத்த இத்திருகோயிலை திருத்தி அமைத்திட முன்னவனே முன்னின்றால் முடியாதும் உள்ளதோ என்ற முதுமொழி சார் பேரன்புடைய பெரியோர்கள் சார்பில் 2002ம் ஆண்டில் [ 26-10-2002 ] அருள்மிகு லோகநாயகி சமேத பூமிநாதர் சிவாலய சேவா அறக்கட்டளை என்ற அமைப்பு இறைவன் திருவருள் துணைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் படிக்க